Sunday, September 13, 2009

Nanban

நீ என்னிடம் பேசியதை விட எனக்காக பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை

Friday, September 11, 2009

Tholan

நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை...

நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை...

நீயும்
என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை...

நீயும்
என் சந்தோஷங்களை கண்டதில்லை..
நானும்
உன் சந்தோஷங்களை கொண்டாடியதில்லை...

நீயும்
என் வருத்தங்களில்
என் கைகளை பிடித்து கொண்டதில்லை..
நானும்
உன் வருத்தங்களில்
உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...

நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை...

நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே..

அது
நான் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
உன்னையும்,
நீ சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
என்னையும்
நினைத்துக்கொள்ள செய்கிறது.!!!!!!!!
தோழியே....

உனக்காக அழகான கவிதை எழுதலாம் என்று

நினைத்தேன்....

பின் வேண்டம் என்று விட்டுவிட்டேன்,,,,,,

என் என்றால் உன்னை விடவா என் கவிதை

அழகாக இருக்க போகிறது என்று....!