Wednesday, May 26, 2010

Great Kondamani Comedy !!!

க- Koundamani
சா.இ- Software Engineer

வழக்கமா நம்ம நிகழ்ச்சிக்கு ஒரு நடிகரையோ இல்லை இயக்குனரையோ இல்லன்னா ஏதாவது பிரபலமான வலைப்பதிவரையோ தான் அழைச்சிட்டு இருந்தோம். முதல் முறையா இந்த நிகழ்ச்சிக்கு துறை சார்ந்த ஒருவரை கூப்பிட்டு வந்திருக்கோம். அது என்ன துறை சார்ந்த ஒருத்தர்னு பாக்கறீங்களா? அதான் எப்பவுமே தமிழ் படத்துல பல்பு வாங்கறதுக்குனே வருவாங்களே ஒரு கூட்டம், அதான் அந்த சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ். அதுல இருந்து ஒருத்தரை புடிச்சிட்டு வந்திருக்கோம். இனி நிகழ்ச்சிக்கு போவோம்.

க: வாடா கீபோர்ட் மண்டையா. அது என்னடா நாய் மாதிரி கழுத்துல டோக்கன் மாட்டிருக்க?

சா.இ : இது டோக்கன் இல்லை. என் டேக்.

க: டேய் அதை ஏண்டா இங்க போட்டிருக்க? எப்ப பார்த்தாலும் அதை கழுத்துலயே மாட்டிட்டு அலையறீயே. ஏன் அது இல்லைனா கார்ப்பரேஷன் காரன் வந்து நாய் புடிக்கிற வண்டில ஏத்திட்டு போயிடுவானு பயமா?

சா.இ : நோ மிஸ்டர் பெல். இது இருந்தா தான் ஊர்ல எல்லாரும் மதிப்பாங்க. அதான்.

க: டேய் நாயே நாயே. இப்படியே நீங்க போட்டுட்டு திரிஞ்சா இன்னும் கொஞ்சம் நாள்ல உங்களை யாரும் மதிக்க மாட்டாங்கடா. மிதிப்பாங்க.
அப்பறம் ஏன்டா தப்பு தப்பா இங்கிலிஸ் பேசினாலும் கூச்சப்படாம ஊருல இருக்குற ஆயவைக்கூட விட்டு வைக்காம ”ஹை பாட்டி, யூ ஆர் மை ஸ்வீட்டினு” இங்கிலிஸ்ல பேசறீங்க?

சா.இ : யூ சீ. நாங்க எவ்ரிடே யூ.எஸ், யூ.கே, ஆஸ்ட்ரேலியா க்ளைண்ட்ஸ்'கிட்ட இண்ட்ராக்ட் பண்றோம். சோ வீ ஆர் யூஸ்டு டூ இட். வாட் சே யா?

க: என்னடா மண்டையா 1431 பயாரியா பல்பொடி விக்கறவன் மாதிரி மலேசியா, சிங்கப்பூர்னு கலர் கலரா ரீல் விடற. சரி, நீங்க எல்லாம் தனியா எங்கயும் சாப்பிடவே போக மாட்டீங்களா? கூட்டமா பொண்ணுங்களைக் கூப்பிட்டு தான் போவீங்களா?

சா.இ : யூ ஆர் மிஸ்டேக்கன். அது டீம் இண்ட்ராக்‌ஷன்.

க : டேய் மௌஸ் பால் மண்டையா. டீம் இண்ட்ராக்‌ஷனு கண்ட பொண்ணுங்களையும் கூப்பிட்டு பீசா ஹட்டு, மெக் டோனால்ட்ஸ்னு போறிங்களே. என்னைக்காவது ஃபேமிலி இண்ட்ராக்‌ஷனு சொல்லி அப்பா அம்மாவை இந்த மாதிரி கூப்பிட்டு போய் சந்தோஷப்பட வெச்சிருக்கீங்களாடா?

சா.இ : நோ மிஸ்டர் கவுண்ட்ஸ். அவுங்களுக்கு அந்த மாதிரி எல்லாம் சாப்பிட்டு பழக்கமில்லை. அவுங்களுக்கு அதெல்லாம் ஒத்துக்காது.

க: ஆமாம். இவர் பொறக்கும் போதே ஒரு கைல பர்கரும், இன்னொரு கைல பீசாவும் வெச்சிக்கிட்டு பொறந்தாரு. டேய் ஜாவா மண்டையா, யார் கைல ரீல் விடற. தோசைல சட்னி சாம்பார் ஊத்தி பிசையற மாதிரி பீசால சாஸ் ஊத்தி சாப்பிடற நாயி நீயீ. உனக்கு இவ்வளவு பில்ட் அப்பா?

சா.இ : @#$

க: சரி, அது ஏன்டா ட்ரெயின்ல ஏறினா செண்பகமே செண்பகமேனு பால் கறக்கற ராமராஜன் மாதிரி டவுசர் போட்டு திரியறீங்க?

சா.இ : யூ சி இந்தியாவுல ரொம்ப ஹாட் மேன். வென் ஐ வாஸ் இன் யூ எஸ்

க: ஆரம்பிச்சிட்டானுங்கடா. இவனுங்க அக்கப்போரு தாங்கலயேடா. இதே ஒரு அட்டு ஃபிகர் வெயிட் பண்ண சொல்லுச்சினாலும், மெரினா பீச்லயும் உச்சி வெயில்ல நிப்பானுங்க. ஆனா வெளில இவனுங்க கொடுக்குற பில்ட் அப்புக்கு மட்டும் அளவே இல்லையேடா. அது ஏன்டா பொண்ணுங்களுக்கு வேலை வந்தா மட்டும் போட்டி போட்டு லாஜிக் சொல்லி தரேனு விடாம கடலை போடறீங்க. அதே பசங்களுக்கு ஒண்ணுனா அப்ஸ்காண்ட் ஆகிடறீங்க?

Thursday, May 20, 2010

தமிழ் செம்மொழி மாநாடு கீதம் 2010

தமிழ் செம்மொழி மாநாடு கீதம் 2010

பாடல்: பிரப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடல் வரிகள் : கலைஞர்
பாடியவர்கள்: ஏ.ஆர். ரஹ்மான், டி.எம்.எஸ், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.ப்ரகாஷ், ஷ்ருதி ஹாஸன், நரேஷ் ஐயர், சின்மயி, அருனா சாய்ராம், டி.எம்.கிருஷ்னா, நித்யஸ்ரீ மஹாதேவன், பாம்பே ஜெயஸ்ரி, சின்ன பொண்ணு, ப்லேஸ்
இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி}நம் மொழி - அதுவே
செம்மொழி}செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
- முதல்வர் கருணாநிதி